தமிழ்நாடு

போடியில் ஓ.பன்னீர்செல்வம் அலுவலகம் மீது தாக்குதல்

DIN

தேனி மாவட்டம், போடியில் வியாழக்கிழமை ஓ.பன்னீர்செல்வத்தின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதையடுத்து, அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
எடப்பாடி கே.பழனிசாமி தமிழக முதல்வராக பதவியேற்றதை வரவேற்று, போடியில் வி.கே.சசிகலா ஆதரவாளர்கள் நகர செயலர் பாலமுருகன் தலைமையில் தேவர் சிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்ட அவர்கள் மீண்டும் தேவர் சிலை பகுதிக்கு திரும்பினர்.
இந்நிலையில், 30 பேர் கொண்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் போடி சுப்புராஜ் நகரில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அலுவலகம் முன்பு அவரை ஆதரித்து வைக்கப்பட்டிருந்த பதாகைகளை கிழித்தனர். பின்னர், அவர்கள் அலுவலகத்துக்குள் புகுந்து நாற்காலிகளை உடைத்து எறிந்தனர்.
அப்போது, போடி நகர மாணவரணி செயலர் சேசு என்ற ராஜவேல் (46) என்பவரை அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் தாக்கினர். இதில், அவர் லேசான காயம் அடைந்தார். இதையடுத்து அங்கு வந்த போடி டி.எஸ்.பி. பிரபாகரன், காவல் ஆய்வாளர் சேகர் தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே, ஓ.பன்னீர்செல்வத்தின் அலுவலகம் அருகில் உள்ள வி.கே.சசிகலா ஆதரவாளரான போடி நகர செயலர் ஏ.சி.பாலமுருகன் என்பவரது வீட்டிலும் மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். இதில் அவரது காரின் பக்கவாட்டு கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இச்சம்பவத்தில் பாலமுருகனின் மனைவியும் லேசான காயம் அடைந்தார்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவரணி சார்பில் அவரது வீட்டருகே மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த சம்பவங்களால் போடியில் பதற்றம் ஏற்பட்டதையடுத்து, தேனி எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT