தமிழ்நாடு

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வீட்டில் கல் வீச்சு,பதற்றம்; போலீஸ் குவிப்பு!

DIN

சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வீட்டில் மர்ம நபர்கள் கல் வீசி தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கே போலீஸ் குவிக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தின் 13வது முதல்வராக எடப்பாடி கே. பழனிசாமி இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்வில் பதவியேற்றார்

அதனைத் தொடர்ந்து க்ரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரது ஆதரவாளர்களுக்கும், அருகில் அமைந்துள்ள அமைச்சர் சி.வி.சண்முகத்தின் இல்லத்தில் கூடியிருந்த அமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் இடையே  வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதத்தைத் தொடர்ந்து மர்ம நபர்கள் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வீட்டில் கல் வீசி தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது. இதில் சிலர் காயம் அடைந்தனர். அதைத் தொடர்ந்து அங்கே போலீஸ் குவிக்கபட்டுள்ளது.    

தற்போது அங்கே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT