தமிழ்நாடு

பழனிசாமிக்கு எதிராக வாக்களிப்போம்: மு.க.ஸ்டாலின்

DIN

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் ஆட்சிக்கு எதிராக திமுக எம்எல்ஏக்கள் வாக்களிப்பர் என்று அந்தக் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்துக்குப் பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:-
முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக சட்டப் பேரவை கூட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இந்த நிலையில், ஒட்டுமொத்த எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோர இருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக எம்எல்ஏக்கள் வாக்குகளைப் பதிவு செய்வர்.
ரகசிய வாக்கெடுப்பு: ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டால், திமுக வரவேற்கும். கூவத்தூர் விடுதியில் அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம் குதிரை பேரம் நடைபெறுவதாகக் கூறப்படுவதை, மக்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். அவர்களுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்றார்.
"நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெறுவாரா?' என்ற கேள்விக்கு, "ஒரு நாள் பொறுத்திருங்கள்' என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
இன்று காலை மீண்டும் கூட்டம்: பேரவை வளாகத்தில் சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு ஸ்டாலின் தலைமையில் மீண்டும் கூடி ஆலோசனை நடத்தப்படுகிறது.

கருணாநிதி பங்கேற்க மாட்டார்


நம்பிக்கை வாக்கெடுப்பில் உடல்நலக் குறைவு காரணமாக, திமுக தலைவரும், திருவாரூர் எம்எல்ஏவுமான கருணாநிதி பங்கேற்கப் போவதில்லை என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

பன்னுன் கொலை முயற்சி பின்னணியில் இந்திய புலனாய்வு அதிகாரிகள்: வாஷிங்டன் போஸ்ட்

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினருக்கு சம்மன்!

வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரால் பரபரப்பு!

‘எங்கேயும் எப்போதும்..’

SCROLL FOR NEXT