தமிழ்நாடு

230 எம்.எல்.ஏக்களுடன் தொடங்கியது பேரவை சிறப்புக்கூட்டம்

DIN

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை மீது நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று சனிக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கியது பேரவை சிறப்புக்கூட்டம். இதில் 230 எம்.எல்.ஏக்கள் பங்கேற்றுள்ளனர்.  

மிகுந்த சர்ச்சைக்குரிய நிகழ்வுகளுக்குப் பிறகு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதால், அசம்பாவித சம்பவங்களைத் தடுப்பதற்காக சட்டப்பேரவை வளாகம் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பேரவை கூடியதும் பன்னீர்செல்வத்தின் அணியைச் சேர்ந்த கொறடாவான செம்மலையை பேச அனுமதிக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் குரல் எழுப்பினார். அதனைத் தொடர்ந்து அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் இடையே யார் பேசுவது என்பதில் கடும் அமளி ஏற்பட்டது.
அத்துடன் ரகசிய வாக்கெடுப்பு கோரி திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினார்கள். இந்த அமளிக்கு இடையே முதல்வர் பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
பேரவையில் உறுப்பினர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பேச அனுமதி கோருவதால் அமளி ஏற்பட்டுள்ளது.
திமுக, காங்கிரஸ், மற்ற எதிர்கட்சி உறுப்பினர்கள் மற்றும் பன்னீர்செல்வம் அணியினரும் ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி மீண்டும் வலியுறுத்தி வந்தனர்.  
இந்நிலையில், பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவாக திமுக உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர். மற்ற கட்சி  உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
மேலும், சிறைக்கதிகள் போல் எம்எல்ஏக்கள் அழைத்து வரப்பட்டதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரியும் பன்னீர்செல்வம் ஆதரவு கொறடா செம்மலை வலியுறுத்தி வருகிறார். இதையடுத்து செம்மலை பேச்சுக்கு ஆதரவாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவினருக்கு எதிராக எடப்பாடி ஆதரவு உறுப்பினர்களும் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இதையடுத்து அனைவரும் அமைதி காக்குமாறு சபாநாயகர் தனபால் வேண்டுகோள் விடுத்தார்.
ரகசிய வாக்கெடுப்புக்கு மறுப்பு: ரகசிய வாக்கெடுப்புக்கு சபாநாயகர் தனபால் மறுத்துவிட்டதால் பேரவையில் அமளி ஏற்பட்டதது. இதையடுத்து பேரவையின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து வெளிப்படை வாக்கெடுப்புக்கான பணிகள் தொடங்கியது.
இந்நிலையில், பேரவை உறுப்பினர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று செம்மலை வேண்டுகோள் விடுத்தார். இதற்கு உறுப்பிர்கள் அனைவருக்கும் போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று சபாநாயகர் தெரிவித்தார்.
ஸ்டாலின் உரை: சிறைக்கதிகள் போல் எம்எல்ஏக்கள் அழைத்து வரப்பட்டதாக குற்றம்சாட்டிய ஸ்டாலின், ரகசிய வாக்கெடுப்பு மட்டுமே உண்மையான ஜனநாயகத்திற்கு வழிவகுக்கும் எனவே ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஸ்டாலின் கூறினார். மேலும் வேறொரு நாளில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு சபாநாயகர் மறுத்துவிட்டார்.
பன்னீர்செல்வம் உரை: ராகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும். எம்எல்ஏக்கள் தொகுதிக்குச் சென்று வந்த பிறகு வாக்கெடுப்பு நடத்த வேண்டும். மேலும் மக்களின் குரலை பதிவு செய்ய வேண்டும் பன்னீர்செல்வம் கூறினார்.
காங்கிரஸ் ராமசாமி உரை: ரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு காங்கிரஸ் உறுப்பினர்களின் தலைவர் கே.ஆர்.ராமசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

SCROLL FOR NEXT