தமிழ்நாடு

நம்பிக்கை வாக்கெடுப்பு: திமுக எம்பிக்கள் மனு

DIN

நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை செல்லாது என அறிவிக்குமாறு திமுக வலியுறுத்தியுள்ளது.
ஆளுநர் வித்யாசாகர் ராவை திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ் இளங்கோவன், திருச்சி என்.சிவா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை புறக்கணித்து விட்டு, நடைபெற்ற நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்க வேண்டும்.
ஒருமுறை நம்பிக்கை கோரும் தீர்மானம் முன்மொழியப்பட்டு அதன் மீது வாக்கெடுப்பு நடத்தமுடியாமல் ஒத்திவைக்கப்பட்டால், மீண்டும் அதனை முன்மொழிய 6 மாதகால அவகாசம் வேண்டும்.
இருப்பினும், பிப்ரவரி 18-இல் இரு முறை அந்தத் தீர்மானத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி முன்மொழிந்தார். இந்தத் தீர்மானம் செல்லாது. வாக்கெடுப்பும் ஏற்கத்தக்கதல்ல.
அவை மரபுகளுக்கு மாறாகத் திட்டமிட்டு காவல் துறை உயரதிகாரிகளை பேரவைக்குள் வரவழைத்து, திமுக எம்எல்ஏக்கள் மீது தாக்குதல் நடத்தி, கூண்டோடு வெளியேற்றினர். பேரவைத் தலைவர், ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டார்.
இது அரசியலமைப்பு மற்றும் மக்களாட்சிக்கு எதிரான செயல் என்பதோடு மட்டுமல்லாமல், பேரவையின் மாண்பை குலைக்கும்.
1988-ஆம் ஆண்டு இதேபோன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றபோது, அப்போதைய ஆளுங்கட்சி இதே பாணியைக் கையாண்டு வெற்றி பெற்றதை செல்லாது என அப்போதைய ஆளுநர் அறிவித்தார் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT