தமிழ்நாடு

யானைத் தந்தம் கடத்திய 3 பேர் கைது

DIN

பந்தலூரை அடுத்துள்ள சேரம்பாடியிலிருந்து, ரூ.50 லட்சம் மதிப்புள்ள யானைத் தந்தம் கடத்திய 3 பேரை, குண்டல்பேட்டை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியிலிருந்து ரூ. 50 லட்சம் மதிப்புள்ள யானைத் தந்தங்கள் காரில் கடத்தி வருவதாக கர்நாடக மாநிலம், குண்டல்பேட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சேரம்பாடி பகுதியைச் சேர்ந்த சோமன் (50), மோகன் குஞ்சான் (45), கேரள மாநிலம், திருச்சூர் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் (44) ஆகியோர் தந்தம் கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, குண்டல்பேட்டை காவல் ஆய்வாளர் பிரமோத் குமார், குற்றப் பிரிவு, தனிப்பிரிவு ஆய்வாளர் நாகராஜ் தலைமையிலான போலீஸார் அவர்களை சுற்றிவளைத்து கைது செய்து, 3 யானை தந்தங்களையும், காரையும் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT