தமிழ்நாடு

 ஜெயலலிதா பிறந்தநாள்: தமிழக அரசு, ஓபிஎஸ், அதிமுகவினர் கொண்டாட்டம்

PTI


சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாளை, தமிழக அரசு, ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் மற்றும் அதிமுக தொண்டர்கள் என மூன்று தரப்பினரும் மூன்று முறைகளில் கொண்டாடினர்.

தமிழக அரசு சார்பில், முதல்வர் பழனிசாமி, 69 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தினை, சென்னை ஓமந்தூர் சிறப்பு மருத்துவமனையில், மகிழம் பூ மரக் கன்றினை நட்டு தொடங்கி வைத்தார்.

அதே சமயம், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்கே நகரில் பொதுமக்களுக்கு உதவிகளை வழங்கிப் பேசினார். அப்போது, அதிமுகவின் பொதுச் செயலர் என்றால் அது ஜெயலலிதா மட்டும்தான் என்று கூறினார்.

அதிமுக தொண்டர்கள், பல்வேறு இடங்களில் ஜெயலலிதா திருவுருவப் படத்தை வைத்து அவருக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT