தமிழ்நாடு

காரைக்காலில் அனுமதிக்க மாட்டோம்: வி.நாராயணசாமி

DIN

காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு புதுவை அரசு அனுமதி வழங்காது என்று முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரியில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: புதுக்கோட்டை, காரைக்காலில் தனியார் நிறுவனங்கள் மூலம் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்திலும், காரைக்காலிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க எதிர்ப்புத் தெரிவித்து பல போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.மத்திய அரசு கடிதம் அனுப்பினாலும், காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு புதுவை அரசு அனுமதி வழங்காது. மாநில அரசின் அனுமதி பெறாமல் மத்திய அரசால் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியாது. இந்தத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.
காரைக்காலில் வறட்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுவையில் நிலத்தடி நீர் மூலம் விவசாயம் செய்யப்பட்டாலும், மகசூல் குறைவால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாஹே, புதுவை, காரைக்கால் பகுதிகளை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், வறட்சி பாதிப்புகள் குறித்து மத்தியக் குழுவை அனுப்பி ஆய்வு செய்யவும், அதன் அடிப்படையில் நிவாரணம் வழங்கவும் மத்திய வேளாண்மைத் துறை அமைச்சரை சந்தித்துப் பேசியுள்ளோம். எனினும், புதுவை அரசு நிதியில் இருந்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
"நீட்' தேர்வில் இருந்து புதுவைக்கு விலக்கு அளிக்கத் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளோம். இருந்தாலும், எந்தச் சூழலுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக, "நீட்' தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளோம். புதுவையில் ஜல்லிக்கட்டு நடத்த அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. அதுதொடர்பான அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம். மத்திய அரசு அனுமதியளித்தவுடன் சட்டமாக்கப்பட்டு, புதுவையில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கற்பகவிருட்ச சேவையில் வீதி உலா

விபத்தில் பள்ளி மாணவா் மூளைச்சாவு: உடல் உறுப்புகள் தானம்

கல்வராயன் மலையில் காட்டுத் தீ

விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகளுக்கு தோ்வு போட்டிகள்

தருமபுரி ரயில் நிலைய அஞ்சல் அலுவலகம் தலைமை அலுவலகத்துடன் இணைப்பு

SCROLL FOR NEXT