தமிழ்நாடு

சிதம்பரத்தில் பிப்.27-ம் தேதி பிச்சை எடுக்கும் போராட்டம்: விவசாயிகள் சங்கங்கள் அறிவிப்பு

தினமணி

விவசாயிகள் அனைவரையும் ஒன்று திரட்டி வருகிற பிப்.27-ம் தேதி சிதம்பரம் காந்திசிலையில் இருந்து ஊர்வலமாக சென்று தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தை விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள விவசாயிகளுக்கு இழப்பீடுத் தொகை கிடையாது என்ற அரசு அறிவித்துள்ளது. இதனையறிந்த  அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை முற்றுகையிட்டு அரை நிர்வாண போராட்டம் மற்றும் பிச்சை எடுக்கும்  போராட்டங்ளை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சிதம்பரம்,காட்டுமன்னார்கோயில்  வட்டங்களை சார்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி பிரகாஷ், வீராணம் ஏரி பாசன விவசாயிகள் சங்கம் பாலு, சான்சாகிப் விவசாயிகள் பாசன சங்க நிர்வாக கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன் மற்றும் பல்வேறு விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள் ஒருங்கிணைந்து சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளித்தனர்.

அம்மனுவில் 5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள விவசாயிகளுக்கு இழப்பீடுத் தொகை கிடையாது என்ற அறிவிப்பை கண்டித்து இரு வட்டங்களில் உள்ள விவசாயிகள் அனைவரையும் ஒன்று திரட்டி வருகிற பிப்.27-ந்தேதி சிதம்பரம் காந்திசிலையில் இருந்து ஊர்வலமாக சென்று தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT