தமிழ்நாடு

திருவாடானையில் நடிகர் கருணாஸ் வாகனம் மீது காலணி வீச்சு

DIN

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் சனிக்கிழமை சட்டப் பேரவை உறுப்பினர் கருணாஸ் வாகனம் மீது காலணி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் கருணாஸ் வெள்ளிக்கிழமை அங்குள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற போது தீபா மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் மாலை அணிவிக்காமல் திரும்பினார். இந்நிலையில் அரசு கலைக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு விட்டு மீண்டும் அவர் தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பதாக இருந்தது.
இதை அறிந்த தீபா, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான அரசூர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் தலைமையில் பலர் கருப்புக் கொடியுடன் அங்கு திரண்டனர். தகவலறிந்த திருவாடானை போலீஸார் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த நடிகர் கருணாஸ் வாகனம் மீது ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் காலணிகளை வீசி எறிந்தனர். இதுகுறித்து கருணாஸ் திருவாடானை போலீஸில் புகார் அளித்தார். பின்னர் அவர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார். இச்சமயத்தில் அங்கிருந்த ஒருதரப்பினர் அவருக்கு எதிராக கோஷமிட்டதுடன், தகாத வார்த்தைகளால் பேசினராம். இதனால் நடிகர் கருணாஸ் தரப்பினருக்கும், அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT