தமிழ்நாடு

ராமநாதபுரம், விருதுநகர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் நீக்கம்: சு. திருநாவுக்கரசர்

தினமணி

காங்கிரஸ் கட்சியிலிருந்து  ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டத் தலைவர்களை நீக்கம் செய்து அக்கட்சியின் தலைவர் சு.திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் விதத்தில் செயல்பட்டதால் ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் பொறுப்பில் இருந்து குட்லக் ராஜேந்திரன் நீக்கப்படுகிறார். அவருக்குப் பதிலாக எம்.தெய்வேந்திரன் அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டத் தலைவராக இருந்த எஸ்.வேலாயுதம், கட்சியில் இருந்து விலகிவிட்டதாலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் விதத்தில் செயல்பட்டதாலும் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார். அவருக்குப் பதில் ஸ்ரீராஜா சொக்கர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் கடத்திய வழக்கில் குட்லக் ராஜேந்திரன் அண்மையில் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

SCROLL FOR NEXT