தமிழ்நாடு

சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழா மேலும் வளர்ச்சி பெறும்

DIN

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெறும் இந்த நாட்டியாஞ்சலி விழா மென்மேலும் வளர்ச்சி பெறும் என்று நடிகையும், பரதநாட்டியக் கலைஞருமான ஸ்வர்ணமால்யா கூறினார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் சார்பில், கடந்த 24-ஆம் தேதி முதல் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் 3-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் திரைப்பட நடிகையும், பரத நாட்டியக் கலைஞருமான ஸ்வர்ணமால்யா மற்றும் அவரது குழுவினர் பரத நாட்டியம் ஆடினர்.
பின்னர், அவர் கூறியதாவது:
ஆடல் வல்லான் நடராஜப் பெருமானே நடத்தும் விழாதான் இந்த நாட்டியாஞ்சலி விழா. இது மென்மேலும் வளர்ச்சி பெறும்.
ஆண்டுதோறும் இந்த நாட்டியாஞ்சலி விழாவில் பங்கேற்று, நான் நாட்டியமாடுவேன் என்றார் ஸ்வர்ணமால்யா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT