தமிழ்நாடு

அடிப்படை வசதிகள்: மார்ச் 14 -இல் தமாகா போராட்டம்

DIN

நகர, கிராமப்புற பகுதிகளில் மத்திய, மாநில அரசுகள் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்காததைக் கண்டித்து தமாகா சார்பில் மார்ச் 14 -ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அடிப்படை வசதிகள்கூட கிடைக்காமல் நகர, கிராமப்புற மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். உள்ளாட்சியில் நல்லாட்சியை ஏற்படுத்தும் வகையில், அனைத்துப் பகுதி மக்களின் குடிநீர் பிரச்னை உள்பட அனைத்து பிரச்னைகளையும்
முழுமையாக தீர்ப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனை வலியுறுத்தி, தமாகா சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மார்ச் 14 -ஆம் தேதி காலை 11.00 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தப் போராட்டத்தில் தமாகாவினர் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT