தமிழ்நாடு

தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

DIN

காற்றில் சாதகமான சூழல் உருவாகியுள்ளதால் தென்தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது ஜனவரி முதல் வாரத்தில் நிறைவுபெற்றது. அதனைத் தொடர்ந்து பனிக்காலம் நிலவி வந்ததையடுத்து, இரவு நேரத்தில் பனிப்பொழிவு காணப்பட்டு வந்தது.
இருப்பினும் வங்கக் கடலில் ஓரிரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலைகள் உருவாகியதன் காரணமாக, தமிழகத்தின் தென்மாவட்டங்களில் சில நாள்கள் மழை பெய்து வந்தது.
இந்த நிலையில், காற்றில் சாதகமான சூழல் உருவாகியுள்ளதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியது: லட்சத்தீவு முதல் கர்நாடகம் வரை காற்றின் மேலடுக்கில் சாதகமான சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். இந்தச் சூழல் ஓரிரு தினங்கள் நீடிக்கும் என்றார் அவர்.
வெயில் தாக்கம் அதிகரிப்பு: தமிழகத்தில் பாளையங்கோட்டை, கரூர் பரமத்தி வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. தற்போது வடகிழக்கு திசையில் வீசும் காற்று, தென்மேற்கு திசையாக மாறும். அப்போது வெயிலின் தாக்கம் மாநிலம் முழுவதும் அதிகரிக்கத் தொடங்கும். ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்திலேயே கோடைக்காலம் தொடங்க வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT