தமிழ்நாடு

நியாய விலைக் கடை பணியாளர்கள் 10 பேர் பணியிடை நீக்கம்

DIN

சென்னை மண்டலத்தில் முறைகேடுகளில் ஈடுபட்ட நியாய விலைக் கடை பணியாளர்கள் 10 பேர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஏ.ஞானசேகரன், திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கூட்டுறவுத் துறையின் மூலமாக தமிழகத்தில் 32 ஆயிரத்து 685 நியாய விலைக் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் முழுமையாகச் சென்று சேருவதை கண்காணிக்கவும், பணிநாள்களில் உரிய நேரத்தில் திறந்து குறிப்பிட்ட நேரம் வரை செயல்படுவதை உறுதி செய்யவும் உயரதிகாரிகளால் மாதந்தோறும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, சென்னை மண்டலத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அத்தியாவசியப் பொருள்களில் இருப்பு குறைவு, போலி ரசீது விற்பனை போன்ற முறைகேடுகள் கண்டறியப்பட்டன.
இதுதொடர்பாக திருவல்லிக்கேணி நகர கூட்டுறவுச் சங்கம், காஞ்சிபுரம் மொத்த விற்பனை பண்டகசாலை ஆகியவற்றைச் சேர்ந்த 10 நியாய விலைக் கடை பணியாளர்கள் தாற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று ஞானசேகரன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT