தமிழ்நாடு

'புதுமைகளை உருவாக்குபவர்களே எழுத்தாளர்கள்'

DIN

பழைமைகளை வெளிக்கொணர்வதும், புதுமைகளை உருவாக்குவதும் எழுத்தாளர்கள் தான் என திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ண
குமார் கூறினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் சார்பில் 12 நாள் புத்தகத் திருவிழா செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையில் உள்ள கிருஷ்ண மகாலில் நடைபெற்று வருகிறது. விழாவின் 10-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்பாக்கம் அறிவியல் இயக்க நிர்வாகி ச.வெங்கடேசன் தலைமை வகித்தார். திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் தலைவர் சோ.மோகனா, பேராசிரியர் காளீஸ்வரன், எழுத்தாளர் ச.கந்தசாமி, பி.வெற்றிவேல், ஏ.ஆர்.சக்கரவர்த்தி உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றுப் பேசினர்.
நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் பேசுகையில், பழைமைகளை வெளிக் கொணர்வதும், புதுமைகளை உருவாக்குவதும் எழுத்தாளர் தான். எழுத்தாளர்கள் தான் அனைத்து விஷயங்களையும் புதிதுபுதிதாக உருவாக்கும் வல்லமை படைத்தவர்கள் என்றார்.
நிகழ்ச்சிகளை மு.சிவஞானசம்பந்தம் தொகுத்து வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT