முகப்பு
தமிழ்நாடு

சாலை விரிவாக்கப் பணிக்கு எதிர்ப்பு: கடலூரில் வணிகர்கள் மனிதச் சங்கிலிப் போராட்டம்

மந்தாரக்குப்பத்தில் சாலை விரிவாக்கப் பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து 2வது நாளாக வணிகர்கள் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 10:40 AM
பகிர்:

பண்ருட்டி : மந்தாரக்குப்பத்தில் சாலை விரிவாக்கப் பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து 2வது நாளாக வணிகர்கள் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடலூர் - சின்ன சேலம், இடையேயான 332 கி.மீ. தொலைவுக்கு சாலைவிரிவாக்கப் பணியை தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இதில், மந்தாரக்குப்பம் அருகில் உள்ள புறவங்குப்பத்தில் இருந்து ரோமபுரி வரையிலான சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு 4 வழிச் சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது.

இப்பணியால் மந்தாரக்குப்பத்தில் உள்ள சுமார் 1000க்கும் மேற்பட்ட கடைகள், அப்புறப்படுத்தப்படும்

இதனால், 4 வழிச் சாலையை கைவிடக் கோரியும், (பைபாஸ்) மாற்று வழிப் பாதை அமைக்க வேண்டியும் மந்தாரக்குப்பம் அனைத்து வணிகர் சங்கத்தினர் திங்கட்கிழமை கடைகள் முன்பு கருப்புக் கொடி ஏற்றியும், சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்தும் போராட்டம் நடத்தினர்.

இரண்டாவது நாளான இன்று, தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விருதாச்சலம் வட்டாட்சியர் பன்னீர்செல்வம், மந்தாரக்குப்பம் காவல் ஆய்வாளர் ஆரோக்கியசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்திருந்தார்கள்.

இதைத் தொடர்ந்து 6ம் தேதி அன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடவும் வணிகர்கள் திட்ட மிட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →