தமிழ்நாடு

தமிழகத்தில் புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது!

DIN

சென்னை: தமிழகத்தில் 2017ஆம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தமிழகம்முழுவதும் விரிவான அளவில்   சிறப்பு சுருக்கமுறை திருத்தமானது மேற்கொள்ளப்பட்டது. இந்த காலத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்துதல், இடமாற்றம் செய்தல் ஆகிய நடைமுறைகள் செய்யப்பட்டன.

அதன் படி இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதிவாக்காளர் பட்டியலில் 5 கோடியே 92 லட்சம் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 2 கோடியே 93 லட்சம் பேர் ஆண்கள் 2 கோடியே 99 லட்சம் பேர் பெண்கள். 5 ஆயிரத்து 40 மூன்றாம் பாலினத்தவரும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர் பட்டியல் குறித்த முழுமையான விபரங்களை www.elections.tn.gov.in என்ற இணையதளத்தில்  தெரிந்துகொள்ளலாம் என்றும், தகுதி இருந்து வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறும் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

SCROLL FOR NEXT