தமிழ்நாடு

சட்டசபை குழுக்கள்  அமைக்கும் விவகாரம்: சட்டசபை செயலர், அவைத் தலைவருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

தமிழக சட்டமன்றத்தில் பல்வேறு சட்டசபை குழுக்கள் அமைக்கப்படாமல் இருப்பது தொடர்பாக சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் சட்டசபை செயலர், அவைத் தலைவர் ...

PTI

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் பல்வேறு சட்டசபை குழுக்கள் அமைக்கப்படாமல் இருப்பது தொடர்பாக சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் சட்டசபை செயலர், அவைத் தலைவர் மற்றும் தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டசபை தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்றவுடன் திட்டக்  குழு, பொதுக் கணக்கு குழு, உரிமைக் குழு உள்ளிட்ட 12 சட்டசபை குழுக்கள் அமைக்கபட வேண்டும் என்பது மரபு. ஆனால் இந்த முறை அவ்வாறு குழுக்கள் எதுவும் அமைக்கப்படவில்லை.இதைக் கண்டித்து சட்டசபை எதிர்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஸ்டாலின் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருந்தாவது:

சட்டசபை நடவடிக்கைகளை உள்ளிருந்து கண்காணிக்கும் ஒரு அமைப்பாக இருந்து செய்லபட வேண்டியது இந்த சட்டசபை குழுக்களின் கடமையாகும். புதிய அரசுக்கு போதிய அவகாசம் அளித்தும் குழுக்கள் இன்னும் அமைக்கப்படவில்லை. சட்டசபையில் முக்கிய எதிர்க்கட்சியான திமுகவுக்கு இந்த் குழுக்களில் சரியான

பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி இந்த விவகாரத்தை சட்டசபையில்  ஸ்டாலின் எழுப்பிய பொழுது விரைவில் குழுக்கள் அமைக்கப்படும் என்று சபாநாயகர் தெரிவித்தார். ஆனால் இதுவரை எதுவும் நடைபெறவில்லை 

இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார். அதன் பிறகு இந்த வழக்கில் சட்டசபை செயலர், அவைத் தலைவர் மற்றும் தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

ஆப்கனில் மீண்டும் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு!

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

தேவா குரலில் வெளியான ஜெய்யின் புதிய படத்தின் பாடல்! இணையத்தில் வைரல்!

SCROLL FOR NEXT