தமிழ்நாடு

காலம் கடந்து...தாஸ் கேபிட்டல் காரல் மார்க்ஸ்

DIN

உலக அரசியலில் வேறு எந்த நூலும் தாஸ் கேபிட்டல் அளவுக்கு மாற்றங்களை ஏற்படுத்தியதில்லை. மிகச் சிறந்த அறிஞரான காரல் மார்க்ஸ், ஜெர்மனி மொழியில் எழுதிய முதலாளித்துவ மற்றும் தொழிலாளி வர்க்கம் குறித்த பொருளாதார கட்டுரைகளே இந்த தாஸ் கேபிட்டல்.
மேலும் அரசபொருளியல் சார்ந்த ஆராய்வுக் கட்டுரைகள், மூலதனம் பற்றி பொருளியலாளர்களால் முன்வைக்கப்பட்ட கோட்பாடுகள், முதலாளித்துவம் பற்றிய மார்க்சின் ஆய்வுகள் போன்றவற்றை உள்ளடக்கமாக இந்த நூல் கொண்டுள்ளது.
தாஸ் கேபிட்டல் நூலின் முதல் பாகத்தை 1867-ஆம் ஆண்டில் மார்க்ஸ் வெளியிட்டார். அதன் பின்னர் 2, 3, 4-ஆம் பாகங்கள் பிரெட்ரிக் எங்கெல்ஸ், காரல் கெளட்ஸ்கி ஆகியோரால் வெளியிடப்பட்டது. தமிழில் மூலதனம் என்ற பெயரில் தியாகு மொழி பெயர்த்துள்ளார்.
இதில் உள்ள கருத்துகளும் காரல் மார்க்ஸின் கருத்துகளும் மார்க்சிஸம் என்ற அரசியல் பிரிவை உண்டாக்கியுள்ளது.
எழுதப்பட்டு சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சோவியத் ரஷியாவிலும் அதன் பின்னர் சீனத்திலும் நடைபெற்ற கம்யூனிஸ்ட் புரட்சிகளுக்கு வித்திட்ட நூல் இந்த தாஸ் கேபிட்டல்தான். அதன் பின்னர் கியூபா, போலந்து, வடகொரியா போன்ற பல நாடுகளில் கம்யூனிஸ்ட் அரசுகள் அமைந்தன என்பது வரலாறு. இன்றளவும் பல நாடுகளில் இயங்கி வரும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பகவத் கீதையாக அமைந்துள்ளது இது.
உலகத்தில் பல நாடுகளில் கம்யூனிஸ்ட் அரசுகள் மாறிவிட்டன. தற்போது கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறும் சில நாடுகளில் கம்யூனிஸ்ட் கொள்கைகள் நீர்த்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தாஸ் கேபிட்டல் கூறும் அரசப் பொருளாதார கூறுகள் மட்டும் என்றும் மாறாமல் அப்படியே உள்ளன.
உலகத்தில் ஏதாவதொரு மூளையில் கடைசி கம்யூனிஸ்ட் இருக்கும் வரையில் தாஸ் கேபிட்டல் காலம் கடந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரதிதாசன் பிறந்த தின பேச்சரங்கம்

கோயில் திருவிழாக்களால் களைகட்டிய மேலப்பாளையம் சந்தை

குறிஞ்சிப்பாட்டின் 99 பூக்களை ஓவியமாக்கிய மாணவி!

அமைச்சா்கள், ஓபிஎஸ்-ஸுக்கு எதிரான மறு ஆய்வு வழக்கு ஒத்திவைப்பு

திருச்செந்தூா் சந்நிதி தெருவில் கழிவு நீா்: பக்தா்கள் அவதி

SCROLL FOR NEXT