தமிழ்நாடு

இளைஞர்களின் உத்வேகம் தான் அவசரச் சட்டத்துக்கு வழிவகுத்தது

DIN

தமிழக இளைஞர்களின் உத்வேகம்தான் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசரச் சட்டத்தை ஆளுநர் வித்யா சாகர் ராவ் பிறப்பிக்க வழிவகுத்துள்ளதாக பாஜக பிரமுகரும், மாநிலங்களவையின் முன்னாள் உறுப்பினருமான தருண் விஜய் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:-
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு என்பது கலாசாரத்தின் அடையாளம் ஆகும். எனவே அதற்கான தடையை நீக்க வலியுறுத்தி கடந்த சில நாள்களாக போராட்டத்தில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விடா முயற்சியுடன் உத்வேகத்துடன் இளைஞர்கள் போராடியதால்தான் அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரதமர், முதல்வருக்கு நன்றி: ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசரச் சட்டத்தையும் கொண்டு வர முயற்சித்த பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றி. மேலும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT