தமிழ்நாடு

காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் காளை நீக்கம்

DIN


சென்னை: தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் பிறப்பித்திருக்கும் அவசரச் சட்டம் மூலமாக காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளை நீக்கப்பட்டுள்ளது.

இந்த அவசரச் சட்டம் அடுத்த 6 மாத காலத்துக்கு அமலில் இருக்கும்.

ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த இதுவரை இருந்த தடை இந்த அவசரச் சட்டம் மூலம் தகர்ந்துள்ளது. இது நிரந்தரத் தீர்வாக இல்லாமல் இருந்தாலும், தமிழக மக்களின் ஒன்றிணைந்த குரலுக்குக் கிடைத்த முதல் மாபெரும் வெற்றி என்றே கருதலாம்.

தமிழகத்தின் கலாசாரப் பாரம்பரியத்துடன் இணைந்த விளையாட்டாக விளங்கும் ஜல்லிக்கட்டு, பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்படுகிறது. 2 ஆயிரம் ஆண்டுகள் மிகப் பழமையானது இந்த விளையாட்டுப் போட்டி. ஆனால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த தடை விதித்து கடந்த 2014-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.

தமிழகத்திலும், மகாராஷ்டிரத்திலும் ஜல்லிக்கட்டு, எருதுப் போட்டிகள் மூலமாக விலங்குகளை காட்சிப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
இதனால் தமிழக மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழகம் முழுக்க போராட்டங்கள் தீவிரமடைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருஞானசம்பந்தா் பள்ளி 99% தோ்ச்சி

இறுதி ஊா்வலத்தில் தகராறு: இளைஞா் வெட்டிக் கொலை

செஞ்சிலுவை தின விழா

சிறப்பு அலங்காரத்தில் பண்ருட்டி வரதராஜ பெருமாள்

அரியலூா் அரசு மருத்துவமனையில் உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சைப் பிரிவு -ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT