தமிழ்நாடு

குடியரசுதினம்: முதல் முறையாக கொடியேற்றுகிறார் முதல்வர்

DIN

குடியரசு தினத்தின்போது, ஆளுநர் கொடியேற்றுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு குடியரசு தினத்தின் போது, முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் தேசியக் கொடியை ஏற்றவுள்ளார்.
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகவும், மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநராகவும் உள்ள வித்யாசாகர் ராவ், அந்த மாநிலத்தில் கொடியேற்றவுள்ளதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் அரசு சார்பில் மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகே 26-ஆம் தேதி காலை 8 மணிக்கு குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கான சிறப்பு மேடைகள் மற்றும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் அமர்வதற்கு தனித்தனியாக இடம் ஒதுக்கப்படுகிறது.
இந்த விழாவுக்கான அழைப்பிதழை தமிழக அரசு முன்கூட்டியே வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அழைப்பிதழை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை காமராஜர் சாலையில் உள்ள மகாத்மா காந்தி சில அருகே குடியரசு நாள் அணி வகுப்பு நடைபெறவுள்ளது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிவகுப்பு மரியாதையை ஏற்பார் என அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலை நிகழ்ச்சிகள் நடைபெறுமா?: குடியரசு தின விழா ஒத்திகையின் போது காவலர்கள், முப்படையினரின் அணிவகுப்பு மட்டுமே நடைபெற்று வருகிறது. இதனால், வழக்கமாக நடைபெறும் கல்லூரி-பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் இந்த ஆண்டு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் ஆளுநர் இல்லாத சூழல், முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவு ஆகியவை காரணமாக குடியரசு தின விழா மிகவும் எளிமையான முறையில் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT