தமிழ்நாடு

'அயன்' திரைப்பட பாணியில் ரூ.5 கோடி கோகைன் கடத்தல்: சென்னையில் தென் ஆப்பிரிக்க பெண் கைது!

சர்வதேச சந்தையில் ரூ.5 கோடி மதிப்புள்ள 'கோகைன்' போதைப் பொருளை, 'அயன்' திரைப்பட பாணியில் மாத்திரை போன்று விழுங்கி கடத்திய தென் ஆப்பிரிக்க பெண் ...

PTI

சென்னை: சர்வதேச சந்தையில் ரூ.5 கோடி மதிப்புள்ள 'கோகைன்' போதைப் பொருளை, 'அயன்' திரைப்பட பாணியில் மாத்திரை போன்று விழுங்கி கடத்திய தென் ஆப்பிரிக்க பெண் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம தொடர்பாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தென் ஆப்பிரிக்கவைச் சேந்தவர் பிரின்சஸ் நோம்பிபிதி சோமி (47). இவர் பிரேசிலின் தலைநகரான சா பாலோ நகரில் இருந்து அபுதாபி வழியாக நேற்று இரவு சென்னைக்கு வந்தார். சுற்றுலா விசாவில் இந்தியா வந்திருந்த அவர் போதைப்பொருள் கடத்துவதாக கிடைத்த தகவலை அடுத்து, போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் அவரை மறித்து சோதனை நடத்தினர்.பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் அவர் கோகைன் என்னும் போதைப் பொருளை 'கேப்ஸ்யூல்களாக' மாற்றி விழுங்கியிருப்பது தெரியவந்தது. பின்னர் உரிய முறையில் அந்த கேப்ஸ்யூல்கள் வெளியே  எடுக்கப்பட்டன.      

மொத்தம் 1.075 கிலோ எடையுள்ள இந்த போதை பொருளை 82 'கேப்ஸ்யூல்களாக' மாற்றி அவர் விழுங்கியிருந்தார்.    சர்வதேச சந்தையில் இதன் மொத்த மதிப்பு ரூ.5 கோடி ஆகும். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அந்தப் பெண் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமீரா, தீக்‌ஷனா பந்துவீச்சில் அசத்தல்..! சான்ட்னர் அதிரடியால் இலங்கைக்கு 169 ரன்கள் இலக்கு!

5 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த IndiGo பயணிகள்! பணியாளர்களுடன் வாக்குவாதம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மே.இ.தீவுகள் சிக்ஸர் மழை பொழியுமா? பயிற்சியாளர் பதில்!

ஸ்ரீ ராம் ட்விஸ்டக்ஸ் ஐபிஓ: இறுதி நாளில் குவிந்த விண்ணப்பங்கள்!

அனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்

SCROLL FOR NEXT