தமிழ்நாடு

திருச்சியில் விவசாயிகள் நூதனப் போராட்டம்

DIN

விவசாயிகள் வாங்கிய கடனுக்காக அவர்களது நிலங்களை ஏலம் விட்டு விற்பனை செய்வதை கைவிட வேண்டும், விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, திருச்சியில் தேசிய மற்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் எலிகளை வாயில் கவ்வியபடி ஊர்வலமாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி ரயில்வே ஜங்ஷன் பகுதியிலிருந்து சங்கத்தின் தலைவர் பொ. அய்யாக்கண்ணு தலைமையில் ஊர்வலமாக வந்த விவசாயிகள் பாரதியார் சாலை வழியாக தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் முதுநிலை அஞ்சல்துறை இயக்குநரை சந்தித்து கோரிக்கைக மனு அளித்தனர்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் அய்யாக்கண்ணு கூறியது:
காவிரி டெல்டா பகுதிகளில் 29 லட்சம் ஏக்கரில் பாசனம் செய்து வந்த நிலையில், நிகழாண்டு ஒரு ஏக்கரில் கூட விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து ரூ. 40,000 கோடி வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என மாநில அரசு கோரியுள்ள நிலையில், மத்திய அரசு இதுவரை நிவாரணம் வழங்கவில்லை.
இந்நிலையில், தேசியமயமாக்கப்பட்ட, தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் விவசாயிகளின் நிலங்களை ஏலம் மூலம் விற்பனை செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. இந்த நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கர் நெல்லுக்கு ரூ.30,000, புஞ்சைப் பயிர்களுக்கு ரூ. 25,000, கரும்பு டன்னுக்கு ரூ. 50,000, வாழை, மஞ்சளுக்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட 270 விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில், வரும் 7-ம் தேதி சென்னை தலைமைச் செயலகம் முன்பு பாம்புக்கறி சாப்பிடும் போராட்டமும், அதைத் தொடர்ந்து மார்ச் 12-ல் புதுதில்லியில் 100 நாள்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெறும் என்றார் அய்யாக்கண்ணு.
போராட்டத்தில், மாவட்டத் தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

வாக்குச்சாவடியை சூரையாடிய பாஜக எம்.பியின் மகன்: குஜராத்தில் அதிர்ச்சி!

மெட் காலாவில் கவனத்தை ஈர்த்த மோனா பட்டேல்.. யார் இவர்?

ஹாட் ஸ்பாட் ஓடிடி தேதி!

வெப்ப அலை: கேரளத்தில் 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT