தமிழ்நாடு

மதுவிலக்கு: அமைச்சருடன் எம்எல்ஏ விவாதம்

DIN

மதுவிலக்கு விவகாரம் தொடர்பாக, அமைச்சர் பி.தங்கமணிக்கும் காங்கிரஸ் குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் கே.ஆர்.ராமசாமி பேசியது: பூரண மதுவிலக்கு எப்போது அமல்படுத்தப்படும் என்றார்.
அப்போது அமைச்சர் தங்கமணி குறுக்கிட்டுக் கூறியது:- மதுவிலக்கு கொள்கையில் அரசு தெளிவாகத்தான் உள்ளது. முதலில் 500 மதுக்கடைகள் மூடப்பட்டன. 5 ஆண்டுகளுக்குள் படிப்படியாக பூரண மதுவிலக்கு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியிலும் மதுவிலக்கை அமல்படுத்தக் கூறினால், நன்றாக இருக்கும் என்றார்.
கே.ஆர்.ராமசாமி: தமிழக சட்டப்பேரவை உறுப்பினர், தமிழகத்தில் கேட்கத்தான் உரிமை உண்டு.
தங்கமணி: புதுச்சேரியிலும், கர்நாடகத்திலும் காங்கிரஸ் அரசுதான் உள்ளது.
அங்கேயும் மதுவிலக்கு அமல்படுத்த வலியுறுத்துங்கள். தமிழக அரசு படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT