தமிழ்நாடு

மேட்டூர் அனல் மின்நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்

DIN

மேட்டூர் அனல் மின்நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.
மேட்டூர் அனல் மின்நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன்கொண்ட நான்கு யூனிட்டுகளும், 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு யூனிட்டும் செயல்பட்டு வருகிறது. மே மாத இறுதியில் 600 மெகாவாட் திறன் கொண்ட புதிய பிரிவில் பராமரிப்புப் பணிகளுக்காக உற்பத்தி நிறுத்தப்பட்டது. இரு தினங்களுக்கு முன் மின் தேவை குறைவு எனக் காரணம் காட்டி, 210 மெகாவாட் திறன் கொண்ட பிரிவில் மூன்று மற்றும் நான்காவது பிரிவில் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
திங்கள்கிழமை 600 மெகாவாட் திறன் கொண்ட பிரிவில் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததால், மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. 210 மெகாவாட் திறன் கொண்ட பிரிவில் நான்காவது பிரிவிலும் உற்பத்தி தொடங்கியது. மூன்றாவது பிரிவில் ஓரிரு தினங்களில் உற்பத்தி தொடங்கும் என மேட்டூர் அனல் மின்நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT