தமிழ்நாடு

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

DIN

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறியது: வெப்பச் சலனத்தின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றனர்.
ஒரு இடத்தில் சதம்: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பச் சலனத்தின் காரணமாக பரவலாக மழை பெய்து வருவதால் வெயிலின் தாக்கம் குறைந்து பெரும்பாலான இடங்களில் 100 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை பதிவானது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி, மதுரையில் மட்டும் 102 டிகிரி வெயில் பதிவானது.
மழை: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் என்ணூர் துறைமுகத்தில் தலா 70 மி.மீ., சென்னை (மீனம்பாக்கம்) மற்றும் சிவகங்கையில் தலா 50 மி.மீ., மகாபலிபுரத்தில் 40 மி.மீ., ஜெயங்கொண்டம், செம்பரம்பாக்கம், கும்பகோணம் மற்றும் கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் தலா 30 மி.மீ., மழையும் பெய்தது. திருவாரூர், நாகப்பட்டினம், திருவிடைமருதூர், உத்தரமேரூர், பொன்னேரி, குடவாசல், செங்கல்பட்டு, தளி, துறையூர்,சோளிங்கர், ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
வெயில் நிலவரம்
(ஃபாரன்ஹீட்டில்):
மதுரை 102
கரூர் பரமத்தி, திருச்சி 99
சென்னை (நுங்கம்பாக்கம்) 94

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

SCROLL FOR NEXT