தமிழ்நாடு

வருமான வரித்துறை அலுலகத்தில் தீ விபத்து: ஆவணங்கள் எரிந்து நாசம்

DIN

சென்னை நுங்கம்பாக்கத்தில் வருமான வரித் துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ஆவணங்கள் எரிந்து நாசமாகின.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள வருமான வரித் துறையின் இணைப்புக் கட்டடத்தில் ஆவண பாதுகாப்பு அறை உள்ளது. இந்த அறையில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் திடீரென கரும் புகை வெளியேறியது. இதைப் பார்த்த ஊழியர்கள் தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த தீயணைப்புப் படை வீரர்கள் எழும்பூர், தேனாம்பேட்டை, கீழ்ப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து நிலைய அதிகாரி குமார் தலைமையில் அங்கு சென்று, தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் அரைமணி நேரப் போராட்டத்துக்கு பின்னர் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் அந்த அறையில் இருந்த ஆவணங்கள், கோப்புகள் எரிந்து நாசமாகின. இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், அங்கிருந்த ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT