ஆபரணத்தங்கத்தின் விலை சென்னையில் திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.352 குறைந்து, ரூ.21,152- க்கு விற்பனையானது.
சர்வதேச பொருளாதார சூழல், உலகச்சந்தையில் தங்கத்தின் நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலை மாற்றுத்துக்கு முக்கிய காரணிகளாக உள்ளன. சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.44 குறைந்து, ரூ.2,644- க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் 50 பைசா குறைந்து, 38 ரூபாய் 10 பைசாவாகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,500 குறைந்து ரூ.38,100- ஆகவும் இருந்தது.
திங்கள்கிழமை விலை
நிலவரம் (ரூபாயில்-
இத்துடன் ஜிஎஸ்டி
சேர்த்துக் கொள்ளப்படும்)
1 கிராம் தங்கம் 2,644
1பவுன் தங்கம் 21,152
1 கிராம் வெள்ளி 38.10
1 கிலோ வெள்ளி 38,100
சனிக்கிழமை
விலை நிலவரம் (ரூபாயில்)
1 கிராம் தங்கம் 2,688
1 பவுன்தங்கம் 21,504
1 கிராம் வெள்ளி 39.60
1 கிலோ வெள்ளி 39,600