2015-2016 மற்றும் 2016-2017 ஆண்டுகளுக்கான பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் அம்மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் பேச்சுவார்தை நடத்தினார். அப்போது 2016-2017 ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகை ஒரிரு நாளில் வழங்கப்படும் என்றும் அதைத்தொடர்ந்து 2015-2016 ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகையும் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.
இதன்பின்னரே விவசாயிகள் தங்களது முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.