தமிழ்நாடு

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறியது: வெப்பச் சலனத்தின் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையைப் பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றனர்.
மதுரையில் வெயில் சதம்: தமிழகத்தில் திங்கள்கிழமை (ஜூலை 17) நிலவரப்படி மதுரையில் மட்டும் 103 டிகிரி வெயில் பதிவானது. மாநிலத்தின் பிற பகுதிகளில் வெப்பச் சலனத்தின் காரணமாக மழையும், இதமான வானிலையும் நிலவியது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் குறைவான வெயிலே பதிவானது.
மழை: திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவாலா, கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு மற்றும் வால்பாறை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 10 மி.மீ., மழை பதிவானது.
வெயில் நிலவரம்
(ஃபாரன்ஹீட்டில்):
மதுரை 103
திருச்சி , பரங்கிப்பேட்டை 99
சென்னை 92

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT