தமிழ்நாடு

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரிக்கை

DIN

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிணைப்பு மாநில பிரதிநிதித்துவப் பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவண்ணாமலையில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிணைப்பு மாநில மைய சங்கத்தின் வைர விழா, மாநில பிரதிநிதித்துவ பேரவைக் கூட்டம் நடைபெற்றன. முன்னாள் மாநிலத் தலைவர் இரா.மகேந்திரன், முன்னாள் மாநில துணைத் தலைவர்கள் எஸ்.காந்தி, பி.சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் ப.குமாரவேல் தலைமை வகித்தார். திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் எம்.மோகன்ராஜ் வரவேற்றார்.
மாநில துணைத் தலைவர்கள் காயாம்பூ, கே.ராஜேந்திரன், ஆர்.முருகேசன், அண்ணா, குபேரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.
இதில், நில அளவைத் துறையினருக்கு வரையறுக்கப்பட்ட நிலையான பயணப்படி வழங்க வேண்டும். ஆய்வாளர், துணை ஆய்வாளர்களுக்கு ஊதிய மேம்பாட்டை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர ஊரமைப்பு, மனைப்பிரிவு ஒப்புதல் பெறுமுன் உட்பிரிவு செய்த பின்னரே அங்கீகாரம் வழங்க வேண்டும்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். நவீனமயமாக்கம் என்ற பெயரில் தனியார்மய முயற்சியை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT