தமிழ்நாடு

திருச்சியில் விமான நிலையத்தில் 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்: 3 பெண்கள் கைது

DIN

திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்த போலீஸார், அதனை கொண்டு வந்த 3 பெண்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளில் மதுரையைச் சேர்ந்த ஜெயபிரபா மற்றும் ஜெகதீஸ்வரி  ஆகியோர் சுமார்  26 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்  மதிப்பிலான 984 கிராம் தங்கம் 6 தங்க சங்கிலி,12 தங்க வளையல்கள் கடத்தி வந்தது, அவர்களிடம் நடத்திய பரிசோதனையில்  தெரியவந்தது. அதேபோல், சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த டைகர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை சேர்ந்த மகாராஜ் பேகம் எனும் பெண்ணிடம் 1.60 லட்ச ரூபாய் மதிப்புள்ள 2 தங்க மோதிரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவர்களிடம் திருச்சி வான் நுண்ணறிவு பிரிவு சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாள்களாக அடுத்தடுத்து கடத்தல் தங்கம் சிக்குவதால், திருச்சி விமான நிலையத்தில் கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் அடுத்தடுத்து கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்படுவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT