தமிழ்நாடு

பேரறிவாளனை விரைவில் பரோலில் விடுவிக்க வாய்ப்பு?

DIN

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் விரைவில் பரோலில் விடப்படுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் தனக்கு பரோல் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவரது தாயார் அற்புதம் அம்மாளும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களைச் சந்தித்து மனு அளித்துள்ளார்.
இந்தப் பிரச்னை அண்மையில் நடைபெற்று முடிந்த பேரவைக் கூட்டத் தொடரிலும் எதிர்க்கட்சிகளால் எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் தலைமை வழக்குரைஞரின் கருத்து கோரப்பட்டிருப்பதாகவும், அவரது கருத்தைப் பெற்று பிறகு முடிவு செய்யப்படும் என்றார்.
இதுகுறித்து, தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறியதாவது:
பேரறிவாளனை பரோலில் விடுவது தொடர்பாக அரசு தலைமை வழக்குரைஞர் ஆய்வு செய்து வருகிறார். அவர் கடந்த சில வாரங்களாக உடல் நலமில்லாமல் இருப்பதால் இந்த விஷயத்தில் விரைந்து முடிவெடுக்க முடியவில்லை. அவர் பணிக்குத் திரும்பியவுடன் பரோல் விவகாரம் தொடர்பாக அவரது கருத்து கோரப்படும். அதன்பிறகே தமிழக அரசு தனது முடிவை அறிவிக்கும்.
பரோலில் விடுவதன் மூலம் வேறு ஏதேனும் சட்டச்சிக்கல்கள் அரசுக்கு வருமா என்பது போன்ற அம்சங்கள் ஆராயப்பட்டே முடிவு செய்யப்படும். இதுபோன்ற சிக்கல்கள் வராத பட்சத்தில் அரசு தலைமை வழக்குரைஞரின் பரிந்துரைகளைப் பெற்று நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

SCROLL FOR NEXT