கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி மதுரையில் கைது!
8 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்டுள்ள வழக்கில் திவ்யா கைது செய்யப்பட்டுள்ளார்.
கக்கூஸ் ஆவணப்பட இயக்குநரும் சமூக செயற்பாட்டாளருமான திவ்யபாரதி மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
8 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்டுள்ள வழக்கில் திவ்யபாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
2009-ம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவியாக இருந்தபோது போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அரசு மருத்துவமனை வளாகத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதாக திவ்யபாரதி மீது வழக்கு தொடரப்பட்டது.
மதுரை மாவட்ட 2-வது குற்றவியல் நீதிமன்ற உத்தரவின்படி திவ்யபாரதியைக் கைது செய்துள்ளது காவல்துறை.