தமிழ்நாடு

எட்டு ஆண்டுகளுக்கு முன்பான வழக்கில் கைது: 'கக்கூஸ்' ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதிக்கு நிபந்தனை ஜாமீன்!

DIN

மதுரை: எட்டு ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வழக்கில் இன்று கைது செய்யப்பட்ட 'கக்கூஸ்' ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதிக்,கு நிபந்தனை ஜாமீன் அளித்து மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக செயற்பாட்டாளரும், சமீபத்தில் வெளியான 'கக்கூஸ்' ஆவணப்படத்தின் இயக்குநருமான திவ்யபாரதி இன்று காலை மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் 2009-ம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவியாக இருந்தபோது, மதுரை அரசு மாணவர் விடுதியில் இருந்த வசதிக் குறைபாடுகள் தொடர்பாக போராட்டம் நடந்தது. அப்பொழுது மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதாக திவ்யபாரதி மீது வழக்கு தொடரப்பட்டது.  

8 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில்தான் தற்பொழுது கைது உத்தரவானது  பிறப்பிக்கப்பட்டு, திவ்யபாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்ட 2-வது குற்றவியல் நீதிமன்ற உத்தரவின்படி காவல்துறை.  திவ்யபாரதியைக் கைது செய்துள்ளது

கைது செய்யப்பட்ட திவ்யபாரதிக்கு வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து அவரை சிறையில் அடைக்க  நீதிமன்றம் உத்தரவிட்டது. உடனடியாக திவ்யபாரதி சார்பில் அவரது வழக்கறிஞர் கனகலிங்கம் ஜாமீன் மனுதாக்கல் செய்தார்.

அதனை ஏற்றுக் கொண்டு திவ்யபாரதிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் அவர் ஒருவாரம் தினமும் கையெழுத்திட வேண்டுமென்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT