நெடுவாசலில் மத்திய, மாநில அரசுகளை அடித்து விரட்டுவது போல் போராட்டத்தில் ஈடுபட்டோர். 
தமிழ்நாடு

நெடுவாசலில் விரட்டியடிக்கும் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை மத்திய, மாநில அரசுகளை அடித்து

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை மத்திய, மாநில அரசுகளை அடித்து விரட்டுவதுபோல நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து, ஏப்.12-ஆம் தேதி நெடுவாசல் மக்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். தொடர்ந்து, பல்வேறு கவன ஈர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டுவரும் மக்கள், நெடுவாசல் நாடியம்மன் கோயில் அருகே 105-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை நடத்திய போராட்டத்தில், திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், குண்டர் காவல் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சேலம் கல்லூரி மாணவி வளர்மதியை விடுதலை செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர். தொடர்ந்து, போராடும் மக்களை கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, மத்திய, மாநில அரசுகள் என பதாகைகள் மாட்டிக்கொண்ட 2 பேரை கல்லால் அடித்து விரட்டுவதுபோல சித்தரித்து போராட்டத்தில்
ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுனேத்ரா பவாருடன் என்சிபி தலைவர்கள் சந்திப்பு!

தேசியவாத காங்கிரஸை இணைக்க அஜித் பவார் விரும்பினாரா? - சரத் பவார் பதில்!

234 தொகுதிகளிலும் திமுக நட்சத்திரப் பேச்சாளர்கள் நாளை முதல் பரப்புரை!

“எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வரப்போவதில்லை” - முதல்வர் மு . க. ஸ்டாலின்!

அரையிறுதிக்கான போட்டியில் இந்தியா - பாகிஸ்தான்..! சூடுபிடிக்கும் யு19 உலகக் கோப்பை!

SCROLL FOR NEXT