தமிழ்நாடு

ஏரி, குளங்களை தூர்வார திமுகவுக்கு தடை விதிக்கக் கூடாது: ஸ்டாலின் வழக்கு

DIN


சென்னை: சேலம் மாவட்டத்தில் உள்ள கட்சராயன் ஏரியைத் தூர்வாரும் விவகாரத்தை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்களை தூர்வார திமுகவினருக்கு தடை விதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி மு.க .ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று ஸ்டாலின் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது, கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி துரைசாமி அனுமதியளித்தார். 

இதையடுத்து, இந்த மனு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சேலம் கட்சராயன் ஏரியை திமுகவினர் தூர்வாரியதை அடுத்து, அந்த ஏரியை மு.க. ஸ்டாலின் பார்வையிட காவல்துறையினர் அனுமதி மறுத்து, கைது செய்தனர். இதையடுத்து ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

SCROLL FOR NEXT