தமிழ்நாடு

மத்திய அரசின் பொது விநியோகத் திட்ட அரசாணை விவரம்

DIN

மத்திய அரசு ரூ.1 லட்சத்துக்கும் மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் பொது விநியோகத் திட்டத்தில் இருந்து விலக்கப்படுகிறார்கள் என்று திங்கள்கிழமை அரசாணை வெளியிட்டது. 

இந்த அரசாணையில் வெளியிட்ட விவரம் பின்வருமாறு:

புதிய திட்டத்தின் அடிப்படையில் பொதுவிநியோகத் திட்டத்தில் சலுகை பெறுபவர்களின் விவரம்:-

நகர்ப்புறப் பகுதிகள்:

  • அனைத்து அந்நியோதயா அன்னயோஜனா குடும்பங்கள்.
  • அன்னபூர்ணா திட்ட பயனாளிகளை உறுப்பினர்களாகக் கொண்ட குடும்பங்கள்.
  • நகர்புற ஆட்சி அமைப்புகளிடம் உள்ள அனைத்து வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்கள்.
  • முதியோர் உதவித் தொகை திட்டப் பயணாளிகள் போன்ற இதர நலத்திட்டப் பயானாளிகள்.
  • விதவை மற்றும் திருமணமாகாத பெண்மணியை குடும்பத் தலைவராகக் கொண்ட அனைத்து குடும்பங்கள்.
  • மாற்றுத்திறனாளிகளை (40 சதவீதத்துக்கும் மேல் உடல் ஊனம் இருக்க வேண்டும்) குடும்பத் தலைவர்களாகக் கொண்ட குடும்பங்கள்.
  • குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், வீடு இல்லாதவர்கள், வேலைத்திறன் குறைந்த குப்பை எடுப்பவர்கள், திறனில்லா தொழிலாளிகள் மற்றும் இதர அரசு நலத்திட்டங்களின் கீழ் பயன்பெறும் ஏழை பயனாளிகள்.

கிராமப்புற பகுதிகள்:

  • அனைத்து அந்நியோதயா அன்னயோஜனா குடும்பங்கள்.
  • அன்னபூர்ணா திட்ட பயனாளிகளை உறுப்பினர்களாகக் கொண்ட குடும்பங்கள்.
  • கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளிடம் உள்ள அனைத்து வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள்.
  • முதியோர் உதவித் தொகை திட்டப் பயனாளிகள் போன்ற இதர நலத்திட்ட பயனாளிகள்.
  • விதவை மற்றும் திருமணமாகாத பெண்மணியை குடுபம்பத் தலைவராக கொண்ட அனைத்து குடும்பங்கள்.
  • மாற்றுத்திறனாளிகளை (40 சதவீதத்துக்கும் மேல் உடல் ஊனம் இருக்க வேண்டும்) குடும்பத் தலைவர்களாகக் கொண்ட குடும்பங்கள்.
  • விவசாய கூலி தொழிலாளர்களை கொண்ட குடும்பங்கள்.
  • மக்கள் நிலை ஆய்வின் கீழ் கண்டறியப்பட்ட பாதிக்கப்பட்ட ஏழை குடும்பங்கள்.

புதிய திட்டத்தின் அடிப்படையில் பொதுவிநியோகத் திட்டத்தில் இருந்து நீக்கப்படுபவர்களின் விவரம்:-

  • வருமான வரி செலுத்தும் நபரைக் குறைந்தது ஒரு உறுப்பினராகக் கொண்ட குடும்பங்கள்.
  • தொழில்வரி செலுத்துபவர்களை உறுப்பினராகக் கொண்ட குடும்பங்கள்.
  • பெரு விவசாயிகள் (5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ளவர்கள்) என வகைப்படுத்தப்பட்ட குடும்பங்கள்.
  • மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புகள், மாநகராட்சிகள், தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் மற்றும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட குடும்பங்கள்.
  • நான்கு சக்கர மோட்டர் வாகனத்தை வைத்துள்ள குடும்பங்கள் (ஒரு நான்கு சக்கர வாகனத்தை வணிக பயன்பாட்டிற்காக தினசரி வாழ்வாதாரத்திற்கு வைத்துள்ள குடும்பங்கள் நீங்கலாக).
  • குளிர்சாதனக் கருவி வைத்துள்ள குடும்பங்கள்.
  • மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறைகளைக் கொண்ட தின்காரை, மேற்கூரை மற்றும் சுவர்களைக் கொண்ட வீடுகள்.
  • பல்வேறு சட்டங்களின் கீழ் வணிக நிறுவனங்களை பதிவு செய்து செயல்படும் குடும்பங்கள்.
  • அனைத்து ஆதாரங்களில் இருந்தும் பெறப்படும் ஆண்டு வருமானம் ரூ.1,00,000/- (ஒரு லட்சம் ரூபாய்) அதிகமாக உள்ள குடும்பங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT