தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களில் தென்மேற்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம்

DIN

சென்னை: தென் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், கேரளாவில் மழை பெய்து வருகிறது. ஆனால், தமிழகத்தின் பல பகுதிகளில் இன்னும் தென்மேற்கு பருவமழை தீவிரமடையவில்லை. தற்போது ராமநாதபுரம் மாவட்டம் தோண்டி வரை தென்மேற்கு பருவக் காற்று வீசி வருகிறது.

இந்நிலையில், அடுத்த 3 அல்லது 4 நாட்களில் தென் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளது.

மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT