தமிழ்நாடு

பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் ஆதரவு கேட்டால் ஆலோசிக்கப்படும்: முன்னாள் அமைச்சர் கே.பாண்டியராஜன்

சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எங்களிடம் ஆதரவு கேட்டால், அதுகுறித்து ஆலோசிக்கப்படும் என

DIN

சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எங்களிடம் ஆதரவு கேட்டால், அதுகுறித்து ஆலோசிக்கப்படும் என ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே. பாண்டியராஜன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருத்தணியில் உள்ள தனியார் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், முன்னாள் அமைச்சர் கே.பாண்டியராஜன் கலந்து கொண்டு பேசினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அதிமுக இரு அணிகள் ஒன்றாக இணைய வேண்டும் என்றால், இரு நிபந்தனைகளை மட்டும் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செய்தால், அடுத்த 24 மணி நேரத்திலேயே பேச்சுவார்த்தை நடத்தி இரு அணிகளும் இணைந்து விடும்.

கடந்த மாதம் 17-ஆம் தேதியிலிருந்து டிடிவி.தினகரனுடன் எவ்வித தொடர்பும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதனை எழுத்துப்பூர்வமாக தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பினாலே போதும். இரு அணிகளும் இணைவதற்கு இணக்கமான சூழல் ஏற்படும்.

வரும் 14-ஆம் தேதி தொடங்கும் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை விரைவில் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவோம். பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எங்களிடம் ஆதரவு கேட்டால், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும்.

தினகரன் விதித்த 60 நாள்கள் கெடு எங்கள் அணிக்கு கிடையாது. சில எம்எல்ஏக்கள் காலையில் தினகரனையும், மாலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்துள்ளனர். எனவே, அந்த எம்எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவாக உள்ளனர் என கருத்தில் கொள்ள முடியாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாட்ஸ்ஆப் குழுத் தகவல்களை தவறவிடுகிறீர்களா? விரைவில் புதிய அம்சம் அறிமுகம்!

ஹாட்ரிக் தங்கப் பந்து விருது வென்ற பொன்மட்டி..! முதல் வீராங்கனையாக சாதனை!

காஸா மக்களுக்கு ஆதரவாக இத்தாலியில் வெடித்த போராட்டம்!

உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி சமபலத்துடன் உள்ளது: ஆஸி. கேப்டன்

தில்லி பள்ளி வளாகத்தில் 10 வயது மாணவி மர்ம மரணம்! 18 நாளாகியும் எப்ஐஆர்கூட இல்லை; தாய் கதறல்!

SCROLL FOR NEXT