மதுரை கோ.புதூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பால் தரப் பரிசோதனை முகாமைத் தொடங்கி வைத்துப் பார்வையிடுகிறார் ஆட்சியர் கொ.வீரராகவ ராவ். 
தமிழ்நாடு

பாலில் வேதிப்பொருள் கலப்படம் செய்தது பரிசோதனையில் உறுதி விற்பனையாளர் குறித்து விசாரணை

மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற பால் தரப் பரிசோதனை முகாமில், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மாதிரி ஒன்றில் வேதிப்பொருள் கலப்படம் செய்திருப்பது தெரிய வந்தது.

DIN

மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற பால் தரப் பரிசோதனை முகாமில், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மாதிரி ஒன்றில் வேதிப்பொருள் கலப்படம் செய்திருப்பது தெரிய வந்தது.
மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் பால் தர பரிசோதனை விழிப்புணர்வு முகாம் மதுரை கோ.புதூரில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் பாலின் தரத்தையும், கலப்படம் உள்ளதா என்பதையும் அறிய விரும்பினால் இந்த முகாமில் பால் மாதிரி (300 மிலி) வழங்கி உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், முகாம் தொடங்கிய சற்று நேரத்திலேயே ஏராளமானோர் பரிசோதனைக்காக பாலை கொண்டு வந்தனர். மின்னணு பால் தரப் பரிசோதனை சாதனத்தின் (இமேட்) மூலம் பால் பரிசோதனை செய்யப்பட்டது. பொதுமக்கள் மட்டுமின்றி, மாடு வளர்ப்போர், உணவக உரிமையாளர்கள் பலர் பால் பரிசோதனையில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இந்த முகாமைத் தொடக்கி வைத்த ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் செய்தியாளர்களிடம் கூறியது:
உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை மாவட்டத்தில் 388 உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. நிகழ் ஆண்டில் இதுவரை 48 உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
உணவுப் பொருளுக்கான நிர்ணயிக்கப்பட்ட தரம் குறைவாக இருப்பது, அனுமதிக்கப்படாத வண்ணங்கள் சேர்க்கப்படுவது, கலப்படம் செய்வது, போலியாகத் தயாரிப்பது ஆகியவற்றின் அடிப்படையில் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி இதுவரை 56 சிவில் வழக்குகளும், 31 கிரிமினல் வழக்குகளும் தொடரப்பட்டு நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
பால் தரம் பரிசோதனையில் 108 பால் மாதிரிகள் பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்டன. இதில் ஒருவர் அளித்த பாலில் கலப்படம் உள்ளதாக தெரியவந்திருக்கிறது. சோடா, டிடர்ஜென்ட், பைகார்பனேட் இவற்றில் ஏதேனும் ஒரு வேதிப்பொருள் கலந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. கலப்படம் செய்யப்பட்ட பால் எங்கு வாங்கப்பட்டது என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சுகாதாரத் துறை துணை இயக்குநர் அர்ஜுன்குமார், உணவுப் பாதுகாப்பு அலுவலர் லட்சுமி நாராயணன், மாநகராட்சி நகர் நல அலுவலர் சதீஷ்ராகவன் மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் முகாமில் பங்கேற்றனர்.
ஜூன் 12-இல் மேலூர் வட்டாட்சியர் அலுவலகம், ஜூன் 14-இல் வாடிப்பட்டியில் நாடார் மஹால், ஜூன் 16-இல் திருமங்கலம் அசேபா சேவா பால், ஜவஹர் நகர், ஜூன் 19-இல் உசிலம்பட்டியில் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பால் தரப் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹாட் சீட்... அனன்யா பாண்டே!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

SCROLL FOR NEXT