முகப்பு
தமிழ்நாடு

தென்மேற்குப் பருவ மழை வலுப்பெறுகிறது

தென்மேற்குப் பருவ மழை வலுப்பெற்று வருவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:43 PM
பகிர்:

தென்மேற்குப் பருவ மழை வலுப்பெற்று வருவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மத்திய அரபிக் கடல், கர்நாடகம் மற்றும் கோவா வரை தென்மேற்குப் பருவ மேகங்கள் பரவியுள்ளன. தென்னகத்தில் சென்னைக்கு வடக்கே நெல்லூர் வரை பரவியுள்ளது. இந்திய அளவில் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 9-ஆம் தேதி வரை சராசரியாக 18 சதவீதம் மழை பதிவானது.
தமிழகம், கர்நாடகம், கேரளம், கோவா உள்ளிட்ட பகுதிகளில் 17 சதவீத மழை பதிவானது. இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் 16.4 சதவீத மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் மிக அதிகமாக ராமநாதபுரத்தில் 21 மி.மீ., மழை பதிவானது. தெற்கு இந்தியப் பெருங்கடலில் மோரீஷஸ் தீவுகளுக்கு அருகில் உயர்ந்த காற்றழுத்த மண்டலம் ஓரளவு வலுவாக உள்ளது.
5 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை 5 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெயில் பதிவானது. அதிகபட்சமாக மதுரையில் 103 டிகிரி வெயில் பதிவானது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையும், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யும். சென்னையைப் பொருத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மழையும், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கும் வாய்ப்புள்ளது என்றனர்.

வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்)

மதுரை 103
திருச்சி, பாளையங்கோட்டை 101
திருத்தணி, தூத்துக்குடி 100
சென்னை 98

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.