தமிழ்நாடு

கேன் மற்றும் பாட்டில்களில் விற்கப்படும் குடிநீருக்கு ஜி.எஸ்.டி வரியிலிருந்து விலக்கு: அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள்! 

DIN

புதுதில்லி: கேன் மற்றும் பாட்டில்களில் விற்கப்படும் குடிநீருக்கு ஜி.எஸ்.டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வரும் ஜுலை ஒன்றாம் தேதியில் இருந்து நாடு முழுவதும் ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை அமல் படுத்தப்பட உள்ளது. அது தொடர்பான ஜி.எஸ்.டி கவுன்சில் ஆய்வுக் கூட்டமானது இன்று புதுதில்லியில் நடைபெறுகிறது.அந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் புதுதில்லி வந்துள்ளார். தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

வரும் ஜூன் 14-ஆம் தேதி துவங்க உள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஜி.எஸ்.டி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்படும். அத்துடன் கேன் மற்றும் பாட்டில்களில் விற்கப்படும் குடிநீருக்கு ஜி.எஸ்.டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்க உள்ளோம்.

அதனுடன் உள்ளூர் மொழிபடங்களுக்கு குறைந்த பட்ச ஜி.எஸ்.டி வரி விதிப்பு, பீடி மற்றும்மசாலா பொருட்கள்மீதான ஜி.எஸ்.டி வரி குறைப்பு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கான ஜி.எஸ்.டி வரி விகிதம் 12% ஆக இருக்க வேண்டும் ஆகியவை எங்களின் முக்கிய கோரிக்கைகளாக இருக்கும்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செவ்வாய்க் கோளில் வசிக்கப் போகும் 4 மனிதர்கள்! உண்மைதானா?

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

குட்காவை பதுக்கி விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைது

அமெரிக்கா யார் பக்கம்?

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 - 6.5% தான், 8 - 8.5% அல்ல! -ரகுராம் ராஜன்

SCROLL FOR NEXT