தமிழ்நாடு

வல்லரசு வேண்டாம்; விவசாயிகளுக்கு நல்லரசு தான் வேண்டும்: நடிகர் விஜய் வலியுறுத்தல்

வல்லரசாவதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம், முதலில் விவசாயிகளைக் காக்கும் நல்லரசு தான் வேண்டும் என்று நடிகர் விஜய்

DIN

சென்னை: வல்லரசாவதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம், முதலில் விவசாயிகளைக் காக்கும் நல்லரசு தான் வேண்டும் என்று நடிகர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் தனியார் நிறுவனம் சார்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

நாம் அனைவரும் நன்றாக இருக்கும் நிலையில், நமக்கெல்லாம் உணவளிக்கும் விவசாயிகள் நன்றாக இல்லை என வேதனை தெரிவித்த விஜய், வல்லரசாக மாறுவதை பிறகு பார்த்துக் கொள்ளலாம், முதலில் விவசாயிகளுக்கு நல்லரசாக மாற வேண்டும் என்றார்.

மேலும், விவசாயப் பிரச்னைக்கு அவசியமாக மட்டுமல்ல. அவசரமாகவும் தீர்வு வேண்டும்.

மூன்று வேளை உணவு சுலபமாக கிடைப்பதால் அதன் மதிப்பு தெரியாமல் போய்விட்டது. அரிசியை உற்பத்தி செய்து விட்டு அதனை இலவசமாக வாங்குவதற்காக விவசாயிகள் ரேஷன் கடை வரிசையில் நிற்பதாக வேதனை தெரிவித்தார்.

இப்போதெல்லாம் ஆரோக்கியம் இல்லாத உணவு தான் கிடைக்கிறது. அடுத்த சந்ததிக்கு இதுவும் இல்லாத நிலையும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்படுவதாக நடிகர் விஜய் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

SCROLL FOR NEXT