தமிழ்நாடு

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்: சு. திருநாவுக்கரசர் பேட்டி

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு. திருநாவுக்கரசர்

DIN

திருப்பரங்குன்றம்: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு. திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
மகாத்மா காந்தி இழிவுப்படுத்தும் வகையில் விமர்சனம் செய்த பாஜக தலைவர் அமித் ஷாவை தமிழக காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. பாஜக தமிழகத்தில் அதிமுகவை 3 அணிகளாக பிரித்து வைத்துள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுகவினரின் வாக்குகளை பெறும் வரை தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையிலான ஆட்சி கவிழாது.  

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. எனவே, மீண்டும் அதுபோல போராட்டங்கள் நடத்தி எய்மஸ் மருத்துவமனை மதுரையில் அமைய வலியுறுத்துவோம். உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் நாளைமுதல் எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு! வருவாய்த் துறை சங்கம் அறிவிப்பு!

பைசன் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிகாரில் பாஜகவுக்கு எதிராக போராட்டம் வெடித்ததா? உண்மை என்ன?

புத்தகப்பையை சுமந்துகொண்டு 100 முறை தோப்புக்கரணம்: பள்ளி மாணவி பலி

செளதி அரேபியாவில் பேருந்து விபத்து: 42 இந்தியர்கள் பலி!

SCROLL FOR NEXT