தமிழ்நாடு

தஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தை மத்திய அரசு நிராகரிப்பு: பேரவையில் முதல்வர் தகவல்!

DIN

சென்னை: தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மாநில அரசு பரிந்துரை செய்த  இடத்தை,  மத்திய அரசு நிராகரித்து விட்டது என்று சட்டப் பேரவையில் முதல்வர் பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று திமுக உறுப்பினர் பொன்முடி தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது  தொடர்பாக அரசு விளக்க ம் அளிக்க,வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். அவரது கேள்விக்கு பதில் அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்.அதற்காக மதுரை, செங்கல்பட்டு,பெருந்துறை, திருச்சி மற்றும் தஞ்சை என ஐந்து இடங்களை பரிந்துரை செய்திருந்தோம். அதில் தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி இடத்தை மத்திய அரசு குழு நிராகரித்து விட்டது.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டுமானால் குறடைந்த பட்சம் 200 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். அந்த இடத்திலிருந்து பேருந்து, ரயில் மற்றும் விமான சேவைகளை அருகிலிருக்க வேண்டும் என்று பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. 

மத்திய அரசின் நிபந்தனைகளுக்கு ஏற்றவாறு, மாநில அரசு பரிந்துரைத்துள்ள ஐந்து இடங்களிலிருந்து ஏதாவது ஒன்றில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இந்த அரசு கண்டிப்பாக முயற்சிகள் எடுக்கும்.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT