முகப்பு
தமிழ்நாடு

பண்ருட்டி அருகே மதுபாட்டில் கடத்தி வந்த சரக்கு வாகனத்தை மடக்கிப் பிடித்த போலீசார்

பண்ருட்டி அருகே மதுபாட்டில் கடத்தி வந்த வாகனத்தை ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் மடக்கிப் பிடித்து சரக்கு பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:46 PM
பகிர்:

நெய்வேலி: பண்ருட்டி அருகே மதுபாட்டில் கடத்தி வந்த வாகனத்தை ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் மடக்கிப் பிடித்து சரக்கு பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

பண்ருட்டி அருகே நெடுஞ்சாலை ரோந்து வாகனம் எண் 11-ல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமசாமி பண்ருட்டியில் இருந்து மடபட்டூர் சாலையில் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள், வீரபெருமாநல்லூர் அருகே வந்த சிறிய ரக சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர்.

ஆனால், அந்த வாகனம் நிறுத்தாமல் சென்றுள்ளது. தொடர்ந்து வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்ற போலீசார் வாகனத்தை மடக்கிப் பிடித்தனர். அப்போது சிறிய ரக வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் வாகனத்தை விட்டுவிட்டுத் தப்பி ஓடியுள்ளார். வாகனத்தைச் சோதனை செய்கையில் 48 குவாட்டர் பாட்டில் கொண்ட அட்டைப் பெட்டிகள் என மொத்தம் 4,800 மதுபாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.

முதல்கட்ட விசாரணையில் இந்தச் சரக்கு பாட்டில்கள் புதுச்சேரியில் இருந்து கொண்டுவரப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →