தமிழ்நாடு

7 இடங்களில் வெயில் சதம்

DIN

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திங்கள்கிழமை 7 இடங்களில் 100 டிகிரிக்கு அதிகமாக வெப்பநிலை பதிவானது. திருச்சியில் அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் கொளுத்தியது.
சென்னையைப் பொருத்தவரை, நுங்கம்பாக்கத்தில் 99 டிகிரி, மீனம்பாக்கத்தில் 98 டிகிரி வெப்பநிலை பதிவானது.
கோடைகாலம் நிறைவடைந்த பிறகு, தென்மேற்குப் பருவமழை மே கடைசியில் தொடங்கியது. தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்தாலும், பல இடங்களில் வெயில் கொளுத்துகிறது.
மழை: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் 20 மி.மீ, சோழவரத்தில் 10 மி.மீ மழை பெய்தது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்)
திருச்சி 105
கரூர் பரமத்தி,
பாளையங்கோட்டை 103
மதுரை, கடலூர் 101
புதுச்சேரி, தூத்துக்குடி 100

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

SCROLL FOR NEXT